கட்டுரைக் காதை

 மதுராபதி

சடையும் பிறையும் தாழ்ந்த சென்னிக், குவளை உண்கண் தவளவாள் முகத்தி கடைஎயிறு அரும்பிய பவளச்செவ் வாய்த்தி; இடைநிலை விரிந்த நித்தில நகைத்தி, இருமருங்கு இருண்ட தீலம் ஆயினும், வலமருங்கு பொன்னிறம் புரையும் மேனியன்! இடக்கை பொலம்பூந் தாமரை ஏந்தினும், வலக்கை அஞ்சுடர்க் கொடுவாள் பிடித்தோள்; வலக்கால் புனைகழல் கட்டினும், இடக்கால் தனிச்சிலம்பு அற்றும் தகைமையள், பனித்துறைக் கொற்கைக் கொண்கன், குமரித் துறைவன், பொற்கோட்டு வரம்பன், பொதியிற் பொருப்பன். குலமுதற் கிழத்தி, ஆதலின்-அலமந்து, ஒருமுலை குறைத்த திருமா பத்தினி, அலமகு திருமுகத்து ஆயிழை நங்கை-தன் முன்னிலை ஈயாள் பின்னிலைத் தோன்றிக் 'கேட்டிசின் வாழி, நங்கை! என் குறை' என


பராசரன் கதை


இன்னுங் கேட்டி! நன்வாய் ஆகுதல்
பெருஞ்சோறு பயந்த திருந்துவேல் தடககை
திருநிலை பெற்ற பெருநாள் இருக்கை,
அறவறி செங்கோல், மறநெறி நெடுவாள்.
புறவுநிறை புக்கோன், கறவைமுறை செய்தோன்;
பூம்புனல் பழனப் புகார்நகர் வேந்தன்,
தாங்கா விளையுள், நன்னாடு அதனுள்
வலவைப் பார்ப்பான், பராசரன்
என்போன், குலவுவேற் சேரன் 
கொடைத்திறம் கேட்டு, வண்டமிழ் 
மறையோற்கு வானுறை கொடுத்த 
திண்டிறல் நெடுவேற் சேரலன் காண்கு" எனக்,
காடும், நாடும், ஊரும் போகி,
நீடுநிலை  மலயம் பிற்படச் சென்று. ஆங்கு


Comments

Post a Comment